மணீஷ் சிசோடியா, சந்யேந்தர் ஜெயின்  
இந்தியா

வகுப்பறை கட்டுமானத்தில் ஊழல்: சிசோடியா,ஜெயினுக்கு ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன்!

அரசுப் பள்ளி கட்டுமான ஊழலில் 2,000 கோடி நிதி முறைகேடு பற்றி..

DIN

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சந்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜூன் 6ஆம் தேதி சத்யேந்தர் ஜெயினும், ஜூன் 9ஆம் தேதி மணீஷ் சிசோடியாவும் ஊழல் தடுப்புப் பிரிவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

தில்லி அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டமைப்பதில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஊழல் தடுப்புப் பிரிவால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் முந்தைய ஆம் ஆத்மி அரசு நிதி மற்றும் கல்வித் துறைகளை வகித்த சிசோடியா, பொதுப்பணித் துறை மற்றும் பிற அமைச்சகங்களுக்குப் பொறுப்பாக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிக்கை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணை காவல்துறை ஆணையர் மதுர் வர்மா கூறினார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊழல் தொடா்பான புகாா்கள் பாஜக தலைவா்கள் ஹரிஷ் குரானா, கபில் மிஸ்ரா மற்றும் நீலகந்த் பக்ஷி ஆகியோரிடமிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் விடுமுறை: சென்னை புறகரில் போக்குவரத்து மாற்றம்!

தென்காசி மாவட்டத்தில் 507 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

இந்தியா, அமெரிக்காவுக்கு வியக்கத்தக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன: சொ்ஜியோ கோா்

11.1.1976: தி.மு.க. எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

SCROLL FOR NEXT