புதிய நாடாளுமன்றம் 
இந்தியா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடக்கம் என அறிவிப்பு.

DIN

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடருக்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை 21ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்று, ஏப்ரல் 4ஆம் தேதியுடன் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது.

இந்த நிலையில்தான், சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், மழைக்காலக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவதை பார்க்கும் நேரம்... ராஷி சிங்!

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? ராமதாஸ் உறுதி!

ஆடி போனா ஆவணி... அனசுயா!

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT