சிக்கிம் நிலச்சரிவு PTI
இந்தியா

சிக்கிம் நிலச்சரிவு: 6வது நாளில் 44 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

சிக்கிம் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 44 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

DIN

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கித் தவித்த 44 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று இரவு பெய்த கனமழையால் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இன்றும் (ஜூன் 6) நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, அங்கு சிக்கிய மக்களையும், மாயமான ராணுவ வீரர்களையும் மீட்கும் பணியில் இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஜூன் 5) மட்டும் ஹெலிகாப்டர்கள் மூலம் 63 பேர் மீட்கப்பட்டனர்.

ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலையால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து, இன்று (ஜூன் 6) காலை முதல் சட்டெனில் சிக்கியிருந்த 44 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டதாகவும், இதன்மூலம் அங்கு சிக்கியிருந்த அனைவரும் வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்ட அனைவரும் பாக்யோங் பகுதியிலுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் மூலம் கேங்டோக் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், 6 பேர் மாயாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

SCROLL FOR NEXT