ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 வயது இளைஞர், 5 வயது சிறுமியை மாம்பழம் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். தொடர்ந்து அந்த நபர் உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டார். பின்னர் அங்கு வந்த போலீஸார் இளைஞரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் குடிபோதையில் இருந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து சான்ஹோ காவல் நிலைய பொறுப்பாளர் சந்தன் குமார் குப்தா கூறுகையில், சிறுமியும் குற்றம்சாட்டப்பட்டவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த நபர் வெள்ளிக்கிழமை கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.
Advertisement
அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி
அவர், சிறுமிக்கு மாம்பழம் கொடுத்து அருகிலுள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். நேற்று இரவு சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவரும் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே போக்ஸோ பிரிவின் கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.