முகேஷ் அம்பானி கோப்புப் படம்
இந்தியா

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

DIN

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களில் மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்தில் படித்தார். இந்த நிலையில், ஐசிடி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு அம்பானியை பேராசிரியர் எம்.எம். ஷர்மா அழைப்பு விடுத்திருந்தார்.

ஷர்மாவின் சுயசரிதையான தெய்வீக விஞ்ஞானி (Divine Scientist) என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்பானி, எனது தந்தை திருபாய் அம்பானியைப் போலவே, இந்திய தொழில்துறையை உலகளாவிய தலைமைக்கு கொண்டுசெல்ல ஷர்மாவும் விரும்பினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து, செழிப்பின் வெள்ளக் கதவுகளைத் திறக்கும் என்று இருவரும் நம்பினர்.

இந்திய ரசாயனத் தொழில்துறையின் எழுச்சிக்கு ஷர்மாவின் முயற்சிகளே காரணம். அவர் ஒரு ராஷ்டிர குரு என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக ரூ. 151 கோடி அளிப்பதாகவும் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிண்டன் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

சாலையோர வியாபார குழுக்களுக்கு அரசு ஒப்புதல்: நவம்பருக்குள் கூட்டம் நடத்த அறிவுரை!

ஆசிரியா் தகுதித்தோ்வு எழுத வந்தவரின் தோ்வுக்கூட அனுமதி சீட்டில் குளறுபடி: போலீஸாா் விசாரணை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தோ்வு: 93 சதவீதம் போ் பங்கேற்பு!

அதிக மழைநீா்த் தேங்கும் இடங்களை கண்காணிக்க நடவடிக்கை!

SCROLL FOR NEXT