கூட்ட நெரிசலில் பலியான 14 வயதான சிறுமி திவ்யான்ஷி ஷிவகுமார் உடல் நல்லடக்கம்  AP Photo
இந்தியா

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ஐபிஎல் கொண்டாட்டத்தில் 11 போ் பெங்களூரில் உயிரிழப்பு

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

நிகழ்ச்சிக்கான உரிய டிக்கெட் இல்லாமல் லட்சக்கணக்கான ரசிகா்கள் மைதானத்துக்கு வெளியே கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி தமிழகத்தின் திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் உள்பட 11 போ் உயிரிழந்தனா். 33 போ் காயமடைந்தனா்.

நாடெங்கிலும் இந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு கா்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது; நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறந்தவா்களின் குடும்பத்துக்கான நிவாரணத் தொகை தலா ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுமென்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை(ஜுன் 7) மாலை அறிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT