பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக ஆண்டுவிழாவில் மோடி பங்கேற்பு..

DIN

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் முதலாமாண்டு ஜூன் 12-ல் வருகிறது. ஆனால் முக்கிய விழா ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும், எனவே பிரதமர் மோடி அன்றைய தினம் மாநிலத்திற்கு வருகை தருவார் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார்.

ஒடிசாவில் பாஜக தலைமையிலான மோகன் சரண் மஜ்ஹி அரசு அமைத்து ஜூன் 12ல் ஓராண்டு நிறைவுபெறுவதையடுத்து, மாபெரும் விழா நடத்த அரசு ஏற்பாடு செய்துவருகின்றது. பிரதமரின் நிகழ்ச்சி நிரலைக் கருத்தில் கொண்டு, முக்கிய விழா ஜூன் 20ல் நடைபெறும். இறுதி நிகழ்ச்சி நிரல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, முதல்வர் மோகன் சரண் மாஜீ, சமீபத்தில் புது தில்லிக்கு வருகை தந்திருந்தபோது ​​ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிறருக்கு முறையான அழைப்பை விடுத்திருந்தார்.

ஆண்டு விழாக்களின் ஒரு பகுதியாக, அனைத்து ஒடிசா அமைச்சர்களும் மாஜி அரசின் முதலாமாண்டு விழா அட்டையை மக்களுக்கு வழங்க மாவட்டங்களுக்குச் செல்ல நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT