அரசுப் பள்ளியில் மரக்கன்று நட்ட முதல்வர் 
இந்தியா

அரசுப் பள்ளியில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்ட தில்லி முதல்வர்!

முதல்வர் ரேகா குப்தா சிந்தூர் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரம் துவக்கினார்..

DIN

தில்லி ஷாலிமார் பாக் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மரம் நடுதல் குறித்த அரசின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில முதல்வர் ரேகா குப்தா "சிந்தூர்" மரக்கன்று ஒன்றை நட்டார்.

ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், 1971 போரின் போது குறிப்பிடத்தக்க துணிச்சலைக் காட்டிய பெண்கள் குழுவால் அவருக்கு வழங்கப்பட்ட சிந்தூர் மரக்கன்றை நட்டார். சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இது கடைப்பிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ரேகா கூறுகையில்,

நமது பிரதமர் சிந்தூர் மரக்கன்றை நட்டார். நானும் அதையே செய்ய விரும்பினேன். கடவுள் என் பிரார்த்தனைகளைக் கேட்டது போல் உள்ளது. இன்று காலை ஒரு பொதுமக்கள் ​​சிலர் எனக்கு 'சிந்தூர்' மரக்கன்று பரிசளித்தனர்.

தாயின் பெயரில் பிரசாரம் 2ஐத் தொடங்க நான் அந்த மரக்கன்றை நட்டேன். ஆயுதப்படைகளுக்கு ஆபரேஷன் சிந்தூருக்காக நன்றி. நமது ஆயுதப்படைகளும், பிரதமர் மோடியும் சகோதரிகளின் கண்ணியத்தைக் காப்பாற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையைத் தொடங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 22 பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தனது ராணுவ பதிலடியை ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டது. பயங்கரவாதிகள் 26 பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். அனைவரும் ஆண்கள் மற்றும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசு மரங்களை நடவில்லை. இந்த பிரசாரம் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரசாரத்தைத் தொடங்குகிறோம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT