குஜராத் உயர்நீதிமன்றம் 
இந்தியா

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் முழு வளாகம் சோதனை..

DIN

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், உயர்நீதிமன்றங்கள் என பல்வேறு மாநிலங்களில் இது தொடர்ந்து வருகின்றது.

அந்தவகையில், குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு இன்று காலை சுமார் 11.45 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நீதிமன்ற கட்டடத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், இன்று மாலை வெடிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மண்டலம் 1-இன் பொறுப்பு துணை காவல் ஆணையர் சஃபின் ஹாசன் தெரிவித்தார்.

மேலும் சம்பவ இடத்துடக்கு உள்ளூர் காவலர்கள் உள்பட ஆறு குழுக்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ்-காந்தி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வளாகத்தில், அனைத்து நீதிமன்ற கட்டடங்கள், அறைகள், நிறுத்தப்பட்டிருந்த மற்றும் உள்ளே வந்த கார்கள் உள்பட போலீஸார் முழுமையான சோதனை நடத்தினர்.

சோதனைக்குப் பிறகு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திங்களன்று நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வை ரத்து செய்ததாக துணை காவல் ஆணையர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT