மும்ப்ரா ரயில் நிலையம்  PTI
இந்தியா

மும்பை புறநகர் ரயிலில் நெரிசல்: தவறி விழுந்த 5 பேர் பலி!

மும்பை புறநகர் ரயிலில் தவறி விழுந்து பயணிகள் உயிரிழந்தது பற்றி...

DIN

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாரஷ்டிர மாநிலத்தில் மும்பைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டநெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலை தாணே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தது.

அதிக கூட்டம் காரணமாக ரயிலில் படிக்கட்டுகளில் அதிகளவிலான பயணிகள் தொங்கியபடி பயணித்துள்ளனர்.

தாணேவை அடுத்த மும்ப்ரா ரயில் நிலையம் அருகே புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்துள்ளனர்.

அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்தவர்களை ரயில்வே காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மும்பை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தாணே - மும்பை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளி... தேஜா வெங்கடேஷ்!

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர்

புன்னகை பூவே... நமீதா பிரமோத்!

இல.கணேசன் உடல் தகனம்

SCROLL FOR NEXT