இந்தியா

2025 இறுதிக்குள் இந்திய மக்கள் தொகை உலகளவில் உச்சம் எட்டும்!

இந்தியாவில் பெண்கள் கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளது...

DIN

ஐ.நா. மக்கள் தொகை அறிக்கையின்படி, மக்கள் தொகையில் உலகளவில் இந்தியா உச்சம் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-இல் இந்திய மக்கள் தொகை 1.463 பில்லியனை(146.39 கோடி) எட்டும் என்று ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் பெண்கள் கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதமானது ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை பிறப்பு என்கிற அளவிலிருந்து 1.9 என்கிற அளவுக்கு குறைந்துவிட்டதாக ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது.

இதன்மூலம், மக்கள் தொகை அளவை அடுத்த தலைமுறை வரை இதேயளவிலேயே பராமரிக்க, இந்திய பெண்களுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக் கொண்டால் போதுமானதாக இருக்கும் என்று ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது.

1960களில் இந்திய மக்கள் தொகை 436 மில்லியன்(43.6 கோடி) என்ற அளவிலிருந்ததாக ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில், இந்திய மக்கள் தொகை 1.7 பில்லியன்(170 கோடி) என்ற உச்சத்தை இன்னும் 40 ஆண்டுகளில் எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT