நிகில் உள்ளிட்டோர் PTI
இந்தியா

பெங்களூர் கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேருக்கு பிணை!

பெங்களூர் கூட்டநெரிசல் வழக்கில் கைதான 4 பேருக்கு பிணை..

DIN

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

முறையான முன்னேற்பாடு இன்றி பேரணி நடத்தியதற்காக ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் நிகில், டிஎன்ஏ நிறுவனத்தின் சுனில் மேத்யூ, கிரண் குமார் மற்றும் ஷமந்த் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பெங்களூர் போலீஸின் கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான்கு பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், 4 பேருக்கும் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பேரணிக்கு போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளாத பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த் உள்பட 5 உயரதிகாரிகள் மாநில அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த விவகாரத்தில் பெங்களூர் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில், ஆர்சிபி முதல் குற்றவாளியாகவும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த டிஎன்ஏ நிறுவனம் இரண்டாவது குற்றவாளியாகவும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொல்லாத பார்வை.. சான்வி மேக்னா!

அழகுக்குவியல்... பிரணிதா!

சென்னை, 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இஸ்ரேலுக்கு எதிராக... கத்தாரில் 50 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

திவ்யமான... திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT