இந்தியா

ஆமதாபாத்தில் விமான சேவை நிறுத்தம்!

ஆமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டதையடுத்து விமான சேவைகள் நிறுத்தம்..

DIN

விமான விபத்தை அடுத்து ஆமதாபாத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது

இந்த விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விமான விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். மேலும், விமான விபத்து விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

விமான விபத்தைத் தொடர்ந்து ஆமதாபாத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது.

சென்னையில் இருந்து ஆமதாபாத் செல்லவிருந்த மூன்று விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“உன்னைப்போல் பிறரை நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!

டயர் உற்பத்தி 7-8 சதவிகிதம் வரை உயரும்!

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

ஃபிளமிங்கோ பூவே... க்ரித்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT