ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணமா? இத்தாலி நாளிதழ் தகவலுக்கு எதிர்ப்பு!
‘ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியே காரணம்’ என இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளதைப் பற்றி...
‘ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியே காரணம்’ என இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு (2025) ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த பிஜே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானிகள், பணியாளர்கள், விமானப் பயணிகள் 241 பேர், கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 19 பேர் என மொத்தமாக 260 பேர் பரிதாபமாக பலியாகினர்.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இத்தாலியைச் சேர்ந்த கோரியர் டெல்லா செரா (Corriere della Sera) என்ற நாளிதழ், ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் ஸ்விட்ச்சை விமானி வேண்டுமென்றே ஆஃப் செய்ததால் விபத்து நேர்ந்ததாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தத் தகவலை மறுத்து, எதிர்ப்பு தெரிவித்துள்ள விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (ஏஏஐபி), அந்த நாளிதழின் கூற்றுக்கள் “தவறானவை மற்றும் அவை வெறும் ஊகங்கள்” என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள், ஸ்விட்ச் தானாக ஆஃப் ஆக வாய்ப்பே இல்லையென்றும், கேப்டன் சுமீத் சபர்வால் ஸ்விட்ச்சை ஆஃப் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில் ‘விமானியின் பங்கு என்ன?’ என்பது குறித்தும், அகமதாபாத் ஏர் இந்தியா விபத்துக்கு சில நொடிகளுக்கு முன், எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டுள்ளது. மூத்த பைலட் சுமீத் சபர்வாலிடம் துணை பைலட் விசாரித்தபோதும் அவர் அமைதியாக இருந்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தித்தாளின் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The Aircraft Accident Investigation Bureau said the investigation is still ongoing, no final conclusions have been reached, and unverified reporting risks causing public anxiety and undermining the integrity of the process.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.