அமித் ஷா  கோப்புப் படம்
இந்தியா

விமான விபத்து: அமித் ஷா அவசர ஆலோசனை!

விமான விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சரின் அவசர ஆலோசனை..

DIN

ஏர் இந்தியா விமான விபத்தையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவசரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது. புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

விமான விபத்து குறித்து குஜராத் அதிகாரிகளிடம் அமித்ஷா கேட்டறிந்தார். மீட்புப்பணிகள் துரிதமாக நடத்தக்கோரி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

விமான விபத்தில் மீட்புப்பணிக்காக 90 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் குஜராத் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT