லண்டன் பயணத் தேதியை மாற்றியதால் விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!
லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத் தேதியை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத் தேதியை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்ற அவர் துரதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் பலியானார்.
லூதியானா (மேற்கு) இடைத்தேர்தல் காரணமாக தனது லண்டன் பயணத் தேதியை விஜய் ரூபானி கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தற்போது தெரிவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாப் அரசியலில் ஈடுபட்டு வந்த அவர் லூதியானா மேற்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக தீவிர பிரசாரம் செய்து வந்திருக்கிறார்.
Advertisement
Advertisement
விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி
விஜய் ரூபானி கடந்த ஜூன் 5 ஆம் தேதியே தனது மகளைச் சந்திக்க லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதே தேதியில் அவரது மனைவி அஞ்சலி ரூபானி லண்டன் சென்றுவிட்டார். ஆனால் இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானியின் பயணத் திட்டங்கள் தாமதமாகின.
இதையடுத்து அவர் தனது லண்டன் பயணத்தை ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து ஜூன் 12ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறார். இந்த நிலையில் ஜூன் 12ஆம் தேதி லண்டன் புறப்பட்டபோதுதான் விஜய் ரூபானி விமான விபத்தில் சிக்கி பலியானார். பஞ்சாபின் லூதியானா (மேற்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூன் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.