கோப்புப் படம் 
இந்தியா

சட்டவிரோத குடியேற்றம்: புணேவில் 4 பேர் கைது!

வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

மகாராஷ்டிரத்தின் புணேவில் வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தெற்கு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் கோந்த்வா காவல் நிலையம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில்

புணேவின் நாட்டிங் ஹில் சொசைட்டியின் புண்யாதம் ஆசிரம சாலைக்கு அருகிலுள்ள தொழிலாளர் முகாமில் வசிக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.

கோந்த்வா பகுதியில் உள்ள தொழிலாளர்கள் முகாமில் ஆவணமற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பது குறித்து ராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து ஜூன் 13ல் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது நான்கு பேர் தப்பிஓட முயன்றபோது கூட்டுக் குழுவால் அவர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களுடன் விசாரணை மற்றும் ஆவணச் சரிபார்ப்பில், இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டவர்கள் என்று தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஸ்வபன் மண்டல் (39), மிதுன் குமார் சந்தால் (35), ரனோதிர் மண்டல் (29), மற்றும் திலீப் மண்டல் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் வங்கதேசத்தின் சத்கிரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இது இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: அனைத்துக் கட்சியினா் மௌன ஊா்வலம்

மது விற்ற தம்பதி கைது

நெல் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக்.5, 6-இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

மயிலாடுதுறையில் அக்.11-இல் கிராமசபைக் கூட்டம்

SCROLL FOR NEXT