ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரக அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதனால் தனது வான் எல்லைகளை ஈரான் மூடியது.
‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்று பெயரிடப்பட்ட, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலி‘ன் பல பகுதிகள் மீது ஈரான் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.