முகப்பு
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈரானில் பலியானோர் பற்றி...

Updated On : 2 மார்ச், 2026 at 3:17 PM
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 3:07 PM

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் தலைமை மதகுரு கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சௌதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 3:09 PM

இந்நிலையில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரெட் கிரசண்ட் சொசைட்டி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் முழுவதும் இதுவரை 131 நகரங்களில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதனிடையே ஈரான் இன்று அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சௌதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

US-Israeli airstrike campaign has killed 555 people so far in Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.