முகப்பு
இந்தியா

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜூன், 2025 at 11:00 AM
கனமழை
பகிர்:

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினாலும் கேரளத்தின் பல்வேறு இடங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகின்றது.

பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது, வீடுகள் அடித்துச்செல்லப்பட்டது. வீட்டின் கூரை சேதமடைந்தது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களான காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பாலக்காடு, எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.