இந்தியா

இஸ்ரேலில் அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளனா்! - இந்திய தூதரகம்

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

Din

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சூழலை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் தூதரகம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இஸ்ரேலில் உள்ள தொழிலாளா்கள், மாணவா்கள், வணிகா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினருடன் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் தொடா்பில் உள்ளது. கள நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதோடு இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடா்ந்து இணைப்பில் உள்ளது.

தேசிய அவசரநிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேபோல் வான் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே, இஸ்ரேல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி தேவையற்ற பயணங்களை இந்தியா்கள் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT