விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்  
இந்தியா

உ.பி.யில் பிக்-அப் வாகனத்துடன் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மோதல்: 5 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள்

DIN

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் ஞாயிற்றுக்கிழமை மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் பயணித்த 5 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்தவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி அபினேஷ் குமார் தெரிவித்தார்.

ஹரியாணாவிலிருந்து பிகாருக்கு ஆம்புலன்ஸ் உடலைக் கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ஆம்புலன்ஸ் பின்னால் இருந்து பிக்-அப் வாகனத்தை மோதியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

பலியானவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர குமார் சிங் கூறுகையில், ஆம்புலன்ஸ் ஹரியாணாவிலிருந்து பிகாரில் உள்ள சமஸ்திபூருக்கு அசோக் சர்மாவின் உடலுடன் சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பை பவர்-பிளேயில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாக்.!

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!

இமைக்காரியே... கௌரி!

நாணமோ... ஷில்பா!

SCROLL FOR NEXT