முகப்பு
இந்தியா

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

ஜார்க்கண்ட் ஆம்புலன்ஸ் விமான விபத்தில் பலியான சஞ்சய்யின் சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 11:08 AM
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் விமானம் - பிடிஐ
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:47 AM

ஜார்க்கண்ட் ஆம்புலன்ஸ் விமான விபத்தில் சஞ்சய் பலியாவதற்கு முன்னதாக அவரது சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ரூ. 8 லட்சம் கடனும் வாங்கியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஓர் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சஞ்சய் (41) என்பவர் பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக அவரை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், அவரது உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

Advertisement

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 11:01 AM
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் விமானம் - பிடிஐ

இதனையடுத்து, தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிகிச்சைக்காகவும், ஆம்புலன்ஸ் விமானத்தின் வாடகைக்காகவும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து ரூ. 8 லட்சம் கடன் வாங்கினர்.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக விமானத்தில் சஞ்சயுடன் அவரது மனைவி அர்ச்சனா, உறவினர் துருவ்வும் உடன் சென்றனர்.

இந்த நிலையில்தான், ராஞ்சியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சத்ரா மாவட்டத்தில் விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சஞ்சய், அர்ச்சனா, துருவ், விமானிகள், மருத்துவக் குழுவினர் என விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் பலியாகினர்.

summary

Ranchi air ambulance victims' family had taken Rs 8 lakh loan for plane

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.