கோப்புப் படம் 
இந்தியா

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

DIN

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 2.77% வளர்ச்சியைக் குறிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''மே மாதத்துக்கான நாட்டின் மொத்த வணிகப் பொருள்கள் மற்றும் சேவைத் துறைகளுக்கான இறக்குமதி 77.75 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 1.02% சரிவாகும்.

மே மாதத்தில் நடந்த சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியில், வணிகப் பொருள்கள், கெமிக்கல்ஸ், மருந்துப் பொருள்கள், கடல் பொருள்கள், ரெடிமேட் ஆடைகள் ஆகியவை முக்கியமானவையாகும்.

குறிப்பாக, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு 4.57 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 54% அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.97 பில்லியன் டாலராக இது இருந்தது.

இதேபோன்று கெமிக்கல் பொருள்கள் ஏற்றுமதி 16% அதிகரித்து 2.68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 2.31 பில்லியனாக இருந்தது.

மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 7.38% அதிகரித்து 2.48 பில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.31 பில்லியனாக இருந்தது.

கடல் பொருள்கள் ஏற்றுமதியும் 26.79% அதிகரித்து 0.73 பில்லியனாகவும், ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி 11.35% அதிகரித்து 1.51 பில்லியன் டாலராகவும் உள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பெங்களூரில் தடையை மீறி பைக் டாக்ஸிகள் இயக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT