ஒரு டிஎன்ஏ பரிசோதனையை செய்து முடித்து உடலை அடையாளம் காண்பதற்கு குறைந்தது 72 மணி நேரம் ஆகும் என்ற நிலையில், ஒரே சவப்பையில் இரண்டு தலைகளுடன் ஒரு உடல் வைக்கப்பட்டிருந்ததால், தடய அறிவியல் குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு பேரின் உடல் பாகங்கள் ஒரே பையில் வைக்கப்பட்டிருப்பதால், டிஎன்ஏ சோதனையை மீண்டும் தனித்தனியாக இருக்கும் உடல் பாகங்களுக்கு மேற்கொண்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது என்று தடய அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.
இதுவரை ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களில் டிஎன்ஏ சோதனையின் மூலம் 32 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 14 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
மீதமுள்ள உடல்கள் மற்றும் உடல்பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உறவினர்களை இழந்தவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் முழுமையான உடல்களை அதிகாரிகள் அளிப்பார்கள் என்று காத்திருந்தனர்.
இதையும் படிக்க. விபத்து கற்றுத்தந்த பாடம்! அவசர அழைப்புக்கு தங்கள் செல்போன் எண்ணை கொடுத்திருந்த பயணிகள்!
சிலரோ, தங்களது உறவினர்களின் முழுமையான உடல் பாகங்களை அளிக்குமாறு அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை சமாதானப்படுத்துவது என்பது இயலாததாகிவிட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மிகவும் கருகிய நிலையில் இருக்கும் உடல் பாகங்கள் அனைத்தையும் மிகச் சரியாக எடுத்து முழுமையாக உடல் பாகங்களை ஒப்படைப்பது என்பது இந்த விபத்தில் இயலாதது என்கிறார்கள்.
அதாவது, உடல்பாகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பைகளில் டிஎன்ஏ பொருந்தாத பாகங்களை அப்படியே வைத்துவிட்டு, அதனை குளிர்பதன கிடங்குக்கு மாற்றிவிடுகிறோம். முழுமையான தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்பட்டு, இறுதியில் அடையாளம் காணப்பட்ட உடல் பாகங்களை மட்டும் சவப்பெட்டிகளில் வைத்து குடும்பங்களிடம் ஒப்படைப்பது தான், நிலையான மருத்துவ நெறிமுறை. அதனை தற்போது பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.