சோனியா காந்தி (கோப்புப்படம்) 
இந்தியா

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்பியுமான சோனியா காந்திக்கு நேற்று வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனையின் இரைப்பை குடல் பிரிவில் அவர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சர் கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த வாரம், உயர் இரத்த அழுத்தம் காரணமாக சோனியா காந்தி சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT