பிகார் முதல்வர் நிதிஷ் குமார்  பிடிஐ
இந்தியா

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள் அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

DIN

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இடையிலான புரிதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று (ஜூன் 17) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, பிகாரின் மதுபானி, பிர்பூர், முங்கேர், வால்மீகி நகர், முஸாஃபர்ப்பூர் மற்றும் சாஹர்ஸா ஆகிய நகரங்களில் புதியதாக விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு விமான நிலையத்தின் வளர்ச்சிக்காக ரூ.25 கோடி என மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கப்படுவதாக, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த் கூறியுள்ளார்.

பிகாரில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்தப் புதிய வளர்ச்சித் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எத்தியோப்பியா தலைநகர் - ஹைதராபாத் விமான சேவை துவக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலைட்! க்யூட்!! ப்ரெட்டி... ப்ரீத்தி!

காலம் பெற உய்யப் போமின்

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

SCROLL FOR NEXT