இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!
தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்டிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துள்ளது. பின்னர், 157 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் இன்று (ஜூன் 17) காலை தில்லி நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டு, நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உடனடியாக, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன், விமானம் மீண்டும் தில்லி புறப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று, ஜெர்மனியிலிருந்து ஹைதரபாத் வந்த லுஃப்தான்ஸா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமர்நாத் பாதைகளில்.. ட்ரோன்கள் பறக்கத் தடை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.