இயந்திரக் கோளாறால் இருளில் மூழ்கிய விமானம்! பயணிகள் அவதி!
இண்டிகோ விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இருளில் மூழ்கியதால் உள்ளே இருந்த 160 பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இண்டிகோ விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இருளில் மூழ்கியதால் உள்ளே இருந்த 160 பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
குஜராத்தின் வதோதரா விமான நிலையத்திலிருந்து தில்லி செல்லவிருந்த இண்டிகோ 6இ 657 விமானம் மே 17 அன்று இரவு 8.40 மணியளவில் இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட மின் தடையால் மொத்தமாக இருளில் மூழ்கியது.
விமானத்திற்கு மின்சாரம் வழங்கும் ஜிபியு கருவியில் ஏற்பட்ட கோளாறால் இப்பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் விமான நிலையை பொறியாளர்கள் இதனைக் கண்டறிய 15 நிமிடங்கள் வரை ஆனது. அதனைச் சரிசெய்ய மேலும் 15 நிமிடங்கள் ஆனது.
Advertisement
Advertisement
ஜிபியு என்பது விமானம் நிறுத்தப்பட்டிருக்கையில் அதனுடன் இணைக்கப்படும் ஒரு கருவியாகும். இதன்மூலம், விமானத்தின் என்ஜின்கள் அல்லது உள்ளிருக்கும் ஜெனரேட்டரின் தேவையின்றி விளக்குகள், மின்னணு அமைப்புகள் மற்றும் ஏசி போன்றவற்றை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் வழங்கப்படும்.
இதில் ஏற்பட்ட பாதிப்பால் விமானம் முழுவதும் 30 நிமிடங்களுக்கு மின் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏசி மற்றும் மின் விளக்குகள் வேலை செய்யாமல் விமானத்துக்குள்ளிருந்த 160 பயணிகள் அவதிக்குள்ளாகி இருளில் தவித்துள்ளனர்.
இதுபற்றி இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இயந்திரக் கோளாறு காரணமாக 6இ 657 விமானம் தாமதமாகக் கிளம்பியது. பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட்ட நிலையில் விமானம் தில்லி நோக்கிப் புறப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கோளாறால் 8.40-க்கு புறப்படவேண்டிய விமானம் 10 மணிக்கும் புறப்பட்டது.
Aircraft Plunges into Darkness Due to Mechanical Failure! Passengers Suffer!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.