ஹைதராபாத் விமான நிலையம் (கோப்புப்படம்) eps
இந்தியா

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை நிலை அமல்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் விமானம் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா சிறப்பு பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று கொச்சியில் இருந்து தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT