கோப்புப் படம் 
இந்தியா

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 61 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி வருகின்றது. இதனால், கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாகவும், இதன்மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,169 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூன் 18) தெரிவித்துள்ளது.

இதில், அம்மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் 23,241 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் தற்போது வரை சுமார் 1,695 நோயாளிகள் குணமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மும்பை நகரத்தில் மட்டும் நிகழாண்டு (2025) துவங்கியது முதல் 899 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில், மே மாதம் 435 பாதிப்புகளும்; ஜூன் மாதம் 458 பாதிப்புகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு கூடாது: கி. வீரமணி

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

அடையாளம் தெரியாத இருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞா் காயம்

SCROLL FOR NEXT