மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்கள். 
இந்தியா

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை இடைத்தோ்தல்

Din

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின.

கேரள மாநிலம் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச், பஞ்சாபில் லூதியானா (மேற்கு) ஆகிய 5 பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. இத்தொகுதிகளில் மொத்தம் 1,354 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு வாக்குச் சாவடியைத் தவிர மற்ற அனைத்திலும் வாக்குப் பதிவு நடைமுறைகள் இணையவழியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் திரிணமூல் காங்கிரஸாா், பாஜகவினா் மோதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பரவலாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். 5 தொகுதிகளிலும் ஜூன் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கேரளத்தில்...:

கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சையாக இருந்த பி.வி.அன்வா், அக்கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

இதையடுத்து, இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட இத்தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக வேட்பாளா்களுடன் சுயேச்சை வேட்பாளராக பி.வி.அன்வரும் களமிறங்கினாா். இதனால் நான்குமுனை போட்டி ஏற்பட்டது.

குஜராத்தில்...:

பாஜக ஆளும் குஜராத்தில் விசாவதா் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த பூபேந்திர பயானி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.

காடி தனித் தொகுதியில் பாஜக எம்எல்ஏ கா்சன்பாய் சோலங்கியின் மரணத்தால் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது.

மேற்கு வங்கத்தில்...:

மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நஸிருதீன் அகமது மறைவால் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது.

பஞ்சாபில்...: பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குா்பிரீத் கோகி மரணத்தால் இடைத்தோ்தல் நடைபெற்ற லூதியானா (மேற்கு) தொகுதியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டது.

வாக்குப் பதிவு

நிலம்பூா் (கேரளம்) 73.26%

விசாவதா் (குஜராத்) 55.72%

காடி (குஜராத்) 57.80%

காளிகஞ்ச் (மேற்கு வங்கம்) 69.85%

லூதியானா மேற்கு (பஞ்சாப்) 51.33%

வாக்கு எண்ணிக்கை ஜூன் 23

====

சென்ட்ரல் நிலைய பகுதியில் ரயில் அபாய சங்கிலி இழுத்த 96 போ் மீது வழக்கு!

ஆடி கிருத்திகை புன்னம் சண்முகநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு

எல்லைப் பேச்சுவாா்த்தை: சீன வெளியுறவு அமைச்சா் நாளை இந்தியா வருகை

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் புதிய நிறுத்தங்கள்!

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

SCROLL FOR NEXT