கோப்புப் படம் 
இந்தியா

மோசமான வானிலையில் சிக்கிய ஹெலிகாப்டர்! கல்லூரியில் அவசர தரையிறக்கம்!

கேரளத்தில் கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது...

DIN

கேரளத்தில் மோசமான வானிலையில் சிக்கிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான செடாக் ஹெலிகாப்டர் இன்று (ஜூன் 19) வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அங்கு நிலவிய மோசமான வானிலையால் அந்த ஹெலிகாப்டர் தொடர்ந்து பறப்பதில் சிரமம் ஏற்பட்டு தடுமாறியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியின் கால்பந்து மைதானத்தில், அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அங்கு வானிலை சீரானதுடன், அந்த ஹெலிகாப்டர் மீண்டும் அதன் பயணத்தைத் தொடர்ந்து, நெடும்பசேரியிலுள்ள கடலோரக் காவல் படையின் விமானத் தளத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று உத்தரகண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேதார்நாத் மேகவெடிப்பு.. 12 ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் 700 உடல்கள்! காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்மையான சுதந்திரத்தை உணா்ந்தால் ஜனநாயகம் வலுபெறும்! பாலச்சந்திரன் ஐஏஎஸ்

இஎஸ்ஐ பதிவு செய்யாத தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புத் திட்டம்: அபராதமின்றி பதிவு செய்ய அழைப்பு

வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

வீட்டுக்கு வர மனைவி மறுப்பு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியா் கைது

SCROLL FOR NEXT