ஸ்பைஸ்ஜெட் விமானம் 
இந்தியா

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு..

DIN

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது.

ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் SG 2696, காலை 6.19 மணிக்குப் புறப்பட்டு, காலை 7.40 மணிக்குத் திருப்பதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 12ல் குஜராத்தின் அகமதாபாத் விபத்துக்குப் பிறகு கடந்த 7 நாள்களில் அதிகளவிலான இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதும், அவசர தரையிறக்கம் செய்வதும் நடைபெற்று வருகின்றது. இது பயணிகளிடையே பெரும் அதிருப்தியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

SCROLL FOR NEXT