இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கோப்புப்படம்
இந்தியா

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

DIN

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள விண்வெளிப் பயணத்தில், சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனா். இந்தத் திட்டத்தில் ஸ்பேஸ்-எக்ஸ், ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோவும் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம், அவா்கள் பயணிக்க இருந்தனா்.

ஆனால் ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பயணம் ஏற்கெனவே 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து ஜூன் 19-ஆம் தேதி அந்தப் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், 5-ஆவது முறையாகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 22 ஞாயிறு அன்று அவர்கள் புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதியில் இருந்து பின்வாங்குவதாகவும், விரைவில அடுத்த தேதி அறிவிக்கப்படும் என்றும் சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT