கோப்புப் படம் 
இந்தியா

ஈரானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் இந்தியா!

ஈரானிலிருந்து இலங்கை மற்றும் நேபாள நாட்டினரும் இந்தியாவால் தாயகம் திரும்பவுள்ளனர்.

DIN

நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களுடன் அவர்களது குடிமக்களும் அழைத்து வரப்படுவார்கள் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரினால், இருநாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக, ஆபரேஷன் சிந்து திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், ஈரானிலுள்ள அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற மற்றொரு பதிவில், ஈரானிலிருந்து இந்தியர்களுடன், இலங்கை மற்றும் நேபாள நாட்டினரும் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, எக்ஸ் தளப் பதிவில், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசுகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, ஈரானில் சிக்கியுள்ள அவர்களது குடிமக்களையும் இந்தியா வெளியேற்றி அழைத்து வரும், எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால், அந்த இரு நாடுகளின் குடிமக்களும் உடனடியாக இந்தியத் தூதரக அதிகாரிகள் அல்லது வெளியிடப்பட்டுள்ள அவசர எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை, ஈரானிலிருந்து மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராகுல் பிறந்தநாள்! காங்கிரஸ் முன்னெடுப்பால் 8,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபெரோவின் தங்கக் கிரீடம் உள்ளே... உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு!

4 எலிகளுடன் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த சீனாவின் இளம் வீரர் குழு!

தெரியாத நபரிடமிருந்து Friend Request! SCAM-ல் சிக்க வேண்டாம்! | Cyber Shield | Cyber Security

வேலூர்: மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

செங்கோட்டையன் VS இபிஎஸ் | யார் B Team? | ADMK | TTV | Sasikala | OPS

SCROLL FOR NEXT