கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடகத்தில் நிலச்சரிவால் ரயில் சேவைகள் பாதிப்பு!

கர்நாடகத்தில் நிலச்சரிவால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன...

DIN

கர்நாடக மாநிலத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தக்‌ஷிணா கன்னடா மாவட்டத்தின், எடக்குமாரி மற்றும் ஷிரிபகிலு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான மலைப்பகுதியிலிருந்து இன்று (ஜூன் 21) அதிகாலை பாறைகள் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், அங்குள்ள சரக்கு ரயில்கள் பயன்படுத்தும் ரயில் பாதையானது முடக்கப்பட்டுள்ளதால், சாக்லெஷ்பூர் - சுப்ரமண்யா சாலை ஆகிய பிரிவுகளின் ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த நிலச்சரிவால், கடகார்வல்லி வந்தடைந்த பெங்களூரு - கண்ணூர் எக்ஸ்பிரஸ், சாக்லெஷ்பூர் வந்தடைந்த பெங்களூர் - முர்தேஷ்வர் எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயப்புரா - மங்களூர் மத்திய எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ரயில்களின் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை ரயில்வே அதிகாரிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

சன் ஆஃப் சர்தார் - 2 சிறப்புக் காட்சி - புகைப்படங்கள்

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

SCROLL FOR NEXT