காரின் கீழ் சிக்கிய தொண்டர்  
இந்தியா

ஆந்திர முன்னாள் முதல்வரின் கார் முன் விழுந்த தொண்டர்: உடல் நசுங்கி பலி!

ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் ஏறி இறங்கியதில் தொண்டர் பலி!

DIN

விஜயவாடா: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் முன்னே விழுந்த தொண்டரின் கழுத்தில் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் சீலி சிங்கையா என்பதும் அவருக்கு வயது 65 என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுள் ஒருவராவார்.

சட்டெனப்பள்ளி தொகுதிக்கு கடந்த புதன்கிழமை வருகை தந்திருந்த ஜெகன் மோகன் ரெட்டியைக் காண பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சட்டெனப்பள்ளி தொகுதிக்குள்பட்ட தடேப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ரெண்டேப்பல்லாவுக்கு பேரணியாக காரில் சென்ற ஜெகனுக்கு வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகப்படுத்தினர்.

இந்தநிலையில், சாலையில் திரண்டிருந்த கூட்டத்தில் ஒருத்தராக முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சீலி சிங்கையா எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகன் சென்று கொண்டிருந்த காரின் முன், நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் விழுந்ததை கவனிக்காத ஓட்டுநரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தாததால், காரின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. அதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த பேரணிக்கு காவல்துறையால் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அதையும் மீறி பலர் திரண்டதால் கூட்ட நெரிசல் உண்டானது. மூன்று வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததையும் புறக்கணித்து ஏராளமான கார்களும் ஜெகனைப் பின்தொடர்ந்தன. இந்தநிலையில், தொண்டர் ஒருவர் கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விடியோ இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

மூவர்ண சேலையில்... ஸ்ரவந்தி சொக்கராபு!

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

SCROLL FOR NEXT