ஏர் இந்தியா விமானம் 
இந்தியா

ரியாத்துக்கு திருப்பி விடப்பட்ட தில்லி-பர்மிங்காம் ஏர் இந்தியா விமானம்

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தில்லி-பர்மிங்காம் விமானம் ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

DIN

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தில்லி-பர்மிங்காம் விமானம் ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பர்மிங்காமில் இருந்து தேசிய தலைநகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சனிக்கிழமை ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டு சௌவுதி நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

பின்னர் விமானத்தில் வழக்கமான சோதனை நடைமுறைகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஏர் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 21 அன்று பர்மிங்காமில் இருந்து தில்லிக்குச் சென்ற AI114 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதன் விளைவாக ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? கங்குலி பதில்!

பிறகு பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, அவர்களுக்கு ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு ரியாத்திலிருந்து பயணிகளை தங்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள், நான் பேட்டினால் பதிலளித்தேன்: திலக் வர்மா

பிரபாஸின் ராஜா சாப் டிரைலர்!

ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

அலைமேல் டால்பின்... ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT