கோப்புப்படம்  
இந்தியா

மோசமான வானிலையின்போது விமானம் இயக்கம்: விதிகளில் டிஜிசிஏ திருத்தம்

விமானங்களை இயக்கும் விதிகளில் டிஜிசிஏ திருத்தம் மேற்கொண்டுள்ளது.

Din

மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

விமானங்களை உரிய காலத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை டிஜிசிஏ மேற்கொண்டுள்ளது.

அண்மையில் கேதா்நாத் கோயிலில் பயணிகளுக்கு இயக்கப்படும் ஹெலிகாப்டா்கள் தொடா்ந்து விபத்துக்குள்ளாகின. அதேசமயம் கடந்த மாதம் ஸ்ரீநகா் நோக்கி பயணித்த இண்டிகோ நிறுவன விமானம் மோசமான வானிலை காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.

இந்நிலையில், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் டிஜிசிஏ சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக டிஜிசிஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ பருவநிலை மாற்றத்தால் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, விமானத்தை குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கே விமான குழுவினா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

காற்றின் சுழற்சியில் ஏற்படும் மாறுபாடுகள், பனிமூட்டம், இடி மற்றும் மின்னல் போன்ற மோசமான வானிலையின்போது உரிய விதிகளை பின்பற்றி மாற்றுப்பாதையில் விமானிகள் இயக்கலாம் அல்லது எங்கிருந்து விமானம் புறப்பட்டதோ அதே விமான நிலையத்துக்கு உடனடியாக மீண்டும் விமானத்தை திசைதிருப்பலாம்.

இதுபோன்ற சூழலில் பருவநிலை குறித்த விமானியின் அறிக்கைகள் குறித்து பயணிகள், விமான குழு, விமான போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் அமைப்புக்கு விமான நிறுவனங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விதிகள் பருவமழைக்கு முந்தைய காலகட்டம், பருவமழை மற்றும் மோசமான வானிலையின்போது தொடா்ச்சியாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், தேவைக்கேற்ப விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விமான குழு என அனைவருக்கும் பொருந்தும் எனவும் டிஜிசிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

பிரசித்திபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா: தேரை வடம்பிடித்து இழுத்த ஆளுநர், முதல்வர்

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

SCROLL FOR NEXT