ஆபரேஷன் சிந்து மூலம் இந்தியர்கள் தாயகம் வருகை PTI
இந்தியா

ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், 160 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!

DIN

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் ஜோர்டான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

போர் எதிரொலியாக இஸ்ரேல் தமது வான்வெளியை மூடிவிட்டதனால், இஸ்ரேலில் இருந்த இந்தியர்கள் ஜோர்டானுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு அதன்பின் ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரிலிருந்து சிறப்பு விமானங்களில் அவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்கீழ், முதல்கட்டமாக 160 இந்தியர்கள் அம்மானிலிருந்து தில்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளனர். அவர்கள் தில்லியை இன்றிரவு வந்தடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இன்னும் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ’ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

Dinamani வார ராசிபலன்! | Aug 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

SCROLL FOR NEXT