இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி PTI
இந்தியா

மே.வங்கம்: இடைத்தேர்தலில் பாஜக தோல்வி! ஆளும் திரிணமூல் காங். பெருவெற்றி!

இடதுசாரி ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் மூன்றாமிடம் மட்டுமே பெற முடிந்தது.

DIN

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்த அவரது தந்தை நசீருதின் அஹமது கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் இன்று(ஜூன் 23) அறிவிக்கப்பட்டன. அதில், நசீருதின் அஹமது கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட அவரது மகள் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆலிஃபா அஹமது 50,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உதின் ஷேக்கால் இந்த இடைத்தேர்தலில் மூன்றாமிடம் மட்டுமே பெற முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT