பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மாதத்தில் தர ஆய்வை கர்நாடக சுகாதாரத்துறை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய பாராசிட்டமால் 650 வகை, பான் டி வகை உள்ளிட்ட மாத்திரைகள் தரம் குறைவாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 14 நிறுவனங்கள் தயாரிக்கும் 14 வெவ்வேறு மாத்திரைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தடை விதிக்கப்பட்ட மருந்துகள்:
காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.
காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி. ஆர்எல்
போமோல்-650 (பாராசிட்டமால் மாத்திரை 650 மி.கி.)
மிடோ க்யூ7 சிரப்
கோழிகளுக்கு செலுத்த பயன்படுத்தப்படும் எண்.டி., ஐ.பி., ஐ.பி.டி. தடுப்பூசி
ஸ்ப்னிஃப்ளாக்ஸ் ஓஇசட் மாத்திரைகள்
பான்டோகாட் - டிஏஆர்
சோடியம் க்ளோரைடு ஊசி ஐ.பி. 0.9
ஆல்பா லிபோயிக் சத்து மாத்திரைகள்
பைராசிட் - ஓ சஸ்பென்ஷன்
கிளிமிஸ் - 2
அயன் (இரும்பு) சுக்ரோஸ் ஊசி யுஎஸ்பி 100 மி.கி. (இரோகெய்ன்)
சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.
ஓம் சாந்தி கோல்டு கிளாஸ் குங்குமம்
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவர இணைப்பில்...
மேலும், மருத்துவர்கள், மருந்து விற்பனையாளர்கள், மருந்தக உரிமையாளர்கள் அனைவரும் உடனடியாக தடை செய்யப்பட்ட இந்த 14 வகை மருந்துகளின் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு வைத்துள்ள மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் உடனடியாக உள்ளூர் மருந்து ஆய்வாளர் அல்லது உதவி மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி மருந்துகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
The Karnataka Health Department has ordered a ban on 14 tablets and medicines, including Paracetamol 650 variant tablet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.