இந்தியா

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை! மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங்.

DIN

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.

அவர் இன்று(ஜூன் 28) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

’மக்களின் சேமிப்பு நின்றுவிட்டது,

குடும்பச் செலவு அதிகம் செய்யவிடாமல் குறுகிய வட்டத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது,

“அமிர்த காலத்தின்” விளைவு இதுதான் போலும்!!’

’சேமிப்புக் கணக்கு மீதான வட்டி விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுகு மிகக் குறைவான அளவை எட்டியுள்ளது,

குடும்பச் செலவினங்கள் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவாக குறைந்த அளவை எட்டியிருக்கிறது,

கடந்த 3 ஆண்டுகளில் தொடர் சரிவைப் பார்க்க முடிகிறது.

இதைப் பார்க்கும்போது ஒன்றை உணர முடிகிறது...

மோடி அரசு மக்களின் பக்கெட்களை கொள்ளையடிக்க ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவே உணர முடிகிறது!!’ என்று கார்கே பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 - 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

ஆனந்தம்... ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

கரூரில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் விளக்கிய தமிழக அரசு!

SCROLL FOR NEXT