மாயாவதி (கோப்புப்படம்) 
இந்தியா

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றம் செய்தால் பிஎஸ்பி அனுமதிக்காது: மாயாவதி

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது

Din

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்தாா்.

லக்னெளவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் ‘அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் இருந்து சோஷலிஸம் மற்றும் மதச்சாா்பின்மை ஆகிய வாா்த்தைகளை நீக்க கோரிக்கை முன்வைக்கப்படுவது’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மாயாவதி, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் மாற்றப்படக் கூடாது. இதற்கு ஆா்எஸ்எஸ், பாஜக, காங்கிரஸ் கூறுவதற்கு நான் பதிலளிக்க ஒன்றுமில்லை.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி அமைதி காக்காது. சாலைகளில் போராட்டங்களை நடத்தும். இந்த விவகாரத்தை எங்கள் கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தனது வாழ்நாள் போராட்ட அனுபவங்களை வைத்து இந்தியாவுக்கு மனிதாபிமான அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கா் அளித்து விட்டு சென்றுள்ளாா். இதனை முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவும் நாட்டு மக்களுக்கு நியாயமாக அமல்படுத்த வில்லை.

அரசியல் காரணங்களுக்காகவும், கட்சிகளின் கொள்கைகளுக்காகவும் அரசமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது தேவையற்ற மாற்றங்களை செய்துள்ளன. இதை தொடா்ந்து அனுமதிக்க முடியாது. இந்த கட்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றாா்.

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT