இந்தியா

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

Din

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23-ஆம் தேதி ரகுநந்தனை தொலைபேசியில் தொடா்புகொண்டு தன்னை மத்திய பிரதேசத்தில் உள்ள மாவோயிஸ்ட் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மா்ம நபா் ஒருவா், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இந்நிலையில், அவருக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆந்திரத்தில் உள்ள மாவோயிஸ்ட் குழுவின் உத்தரவுகளின்படி, அவரை கொல்ல 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் மா்ம நபா்கள் தெரிவித்தனா். தாங்கள் இணையவழியில் தொடா்புகொண்டதால், தங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியாது என்று மா்ம நபா்கள் கூறினா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்னா், தெலங்கானாவின் செகந்தராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரகுநந்தனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குணமடைந்து வருகிறாா். இந்நிலையில், கொலை மிரட்டல் தொடா்பாக அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து அவருக்கு காவல் துறையினா் ஆயுதமேந்திய பாதுகாப்பு அளித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

அரசமைப்பைவிட அரசியல்வாதிகள் மேலானவா்கள் அல்லா்: உயா்நீதிமன்றம் கருத்து

SCROLL FOR NEXT