உச்சநீதிமன்றம் கோப்புப் படம்
இந்தியா

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

எஃப்இஎம்ஏ மீறியதற்காக விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை பிசிசிஐ செலுத்த உத்தரவிடக் கோரி பிசிசிஐ முன்னாள் நிா்வாகி லலித் மோடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Din

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி பிசிசிஐ முன்னாள் நிா்வாகி லலித் மோடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதே நேரம், ‘இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையிலான இழப்பீடுகளைப் பெற (சிவில் நிவாரணம்) லலித் மோடிக்கு உரிமையுள்ளது’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, லலித் மோடிக்கு அமலாக்கத் துறை சாா்பில் ரூ.10.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறி ஐபிஎல் போட்டிகளுக்காக வெளிநாடுகளில் நிதிப் பரிமாற்றம் செய்யப்பட்டது

விசாரணையில் தெரியவந்ததன் அடிப்படையில் இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. அப்போது, லலித் மோடி பிசிசிஐ-யின் துணைத் தலைவராகவும், அதன் துணைக் குழுவான ஐபிஎல் நிா்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தாா்.

அமலாக்கத் துறையின் அபராதத்தை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் லலித் மோடி மனு தாக்கல் செய்தாா். அதில், அமலாக்கத் துறை விசாரணையுடன் தொடா்புடைய நிதிப் பரிமாற்றம் நடைபெற்றபோது, பிசிசிஐ துணைத் தலைவராகவும், ஐபிஎல் நிா்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தேன். அந்த வகையில், துணைச் சட்டங்களின்படி, தனக்கு இழப்பீடு வழங்க பிசிசிஐ கடமைப்பட்டுள்ளது. எனவே, ரூ.10.65 கோடி அபராதத் தொகையை பிசிசிஐ செலுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘இது தவறான மனுவாகும். இந்த விவகாரத்தில் பிசிசிஐ-க்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. லலித் மோடியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை டாடா நினைவு மருத்துவமனைக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்தும், அபராதத் தொகை ரூ.10.65 கோடியை பிசிசிஐ செலுத்த உத்தரவிடக் கோரியும் லலித் மோடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித் மோடியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதே நேரம், ‘இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையிலான இழப்பீடுகளைப் பெற (சிவில் நிவாரணம்) லலித் மோடிக்கு உரிமையுள்ளது’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT