அனுப் குமார் நாயர் (முன்பு / ஆசிரமத்தால் மீட்கப்பட்ட பின்பு)  படம் - எஸ்இஏஎல்
இந்தியா

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார்.

DIN

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.

வீட்டில் உள்ள குப்பைகளைக் கொட்ட வெளியே வருவது கூட அபூர்வம் என்றும், அண்டை வீட்டினர் வற்புறுத்திய பிறகே குப்பைகளைக் கூட வெளியே கொட்டுவார் எனவும் அண்டை வீட்டினர் குறிப்பிடுகின்றனர்.

நவி மும்பையின் கார்குல் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 55 வயதுடைய தொழில்நுட்பத் துறை ஊழியர் ஒருவர் பூட்டிய வீட்டிலேயே இருந்துள்ளார்.

அனுப் குமார் நாயர் என்ற பெயருடைய இவர், தன்னார்வலர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், அன்பின் சுவிஷேச சங்க ஆசிரமத்தின் உதவியுடன் பூட்டிய அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

3 ஆண்டுகளாக முடி வெட்டாமல், சவரம் செய்யாமல் உடல் நிலையும் மோசமாகி மீட்கப்பட்டுள்ளார். அவரின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்ட ஆசிரமம் தெரிவித்துள்ளது.

அனுப் குமாரின் தாயார் பொன்னம்மா நாயர், இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். இவரின் தந்தை குட்டி கிருஷ்ணன் நாயர், டாடா மருத்துவமனையில் பணிபுரிந்தவர். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், கடும் மன உளைச்சலில் சிக்கியுள்ளார் அனுப் குமார்.

உறவினர்கள், நண்பர்கள் மீது நம்பிக்கை இழந்த அவர், பூட்டிய அறையில் தனிமையில் கடந்த 3 ஆண்டுகளைக் கழித்துவந்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ஆசிரமத்தின் ஊழியர் ஒருவர், ''அனுப் குமார் நாற்காலியில் அமர்ந்து உறங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரின் வீட்டில் இருந்த மரச்சாமன்களை யாரோ எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. நாற்காலியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உடனடி சிகிச்சைத் தேவைப்படும் அளவுக்கு அவரின் காலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் இறந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் பலர் அனுப் குமாரை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அனுப் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. மற்றவர்கள் மீது நம்பிக்கை இழந்தவராக அவர் உள்ளார். தற்போது அவர் ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

A tech worker in Mumbai has been living in a locked room for 3 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலைநயம்... சாக்‌ஷி மாலிக்!

முத்து நகை... பாவனா!

ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள்! -அமித் ஷா

சீனாவில் பெய்த கனமழையால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்!

பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்தவித உரிமையும் இல்லை! -மாநிலங்களவையில் அமித் ஷா

SCROLL FOR NEXT