முகப்பு
இந்தியா

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 1 மார்ச், 2025 at 6:59 AM
'பொதிகை' தமிழ்நாடு இல்லம்
பகிர்:

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தில்லியில் 'வைகை', 'பொதிகை' என்ற பெயரில் தமிழ்நாடு இல்லம் உள்ளது. இந்நிலையில் இன்று(மார்ச் 1) காலை 'பொதிகை' தமிழ்நாடு இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது.

மிரட்டல் விடுத்தனர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.