உத்தரப் பிரதேசத்தில் பூனையின் இறப்பால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா(32). இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தில்லியைச் சேர்ந்த ஒருவரி திருமணம் செய்தார். இருவருக்குமிடையே அடிக்கடி மோதல்போக்கு ஏற்படுவதால் இரண்டு வருடத்துக்கு முன்னர் விவகாரத்து செய்தனர். இதனால் பூஜா தனது தாய் கஜ்ரா தேவியுடன் வசித்து வந்தார்.
கணவருடன் பிரிவு காரணமாகத் தனிமையில் இருந்த பூஜா பூனை ஒன்றினை வளர்த்து வந்தார். பூனையின் மீது அதீத காதல் கொண்டு பல ஆண்டுகளாக பாசத்துடன் பூனையை வளர்த்து வந்தார்.
திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட பூனை சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தது. இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் பூஜாவிடம் தெரிவித்தனர். கதறி அழுதார் பூஜா.
தாய் பூஜாவிடம் பூனையை அடக்கம் செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால் பூஜா அதற்கு மறுப்பு தெரிவித்து பூனை மீண்டும் உயிர்பெறும் என்று கூறியுள்ளார்.
பூனையை அடக்கம் செய்ய மனமில்லாமல் அதன் உடலோடு அழுதபடி தூங்கிவந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய மன்றாடினர், ஆனால், அதற்கு பூஜா மறுப்புதெரிவித்த நிலையில், மூன்றாவது நாளாகப் பூனை மீண்டும் உயிருடன் வராது என்பதைப் புரிந்துகொண்டார்.
இதையடுத்து, துக்கம் தாளாமல் பூஜா தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பூஜா இறந்ததைக் கண்ட அவரது கும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இதுதொடர்பாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரி பூஜாவின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.